Monday, January 14, 2013

வலைப்பூ மாற்றம்

Leave a Comment
நண்பர்களே ,
இனிவரும் எனது தொழில்நுட்ப பதிவுகள் எனது மற்றொரு தளமான www.LuckyLimat.com தளத்தில் வெளியாகும். சிரமம் பார்க்காமல் அங்கே என்னை follow செய்து கொள்ளுங்கள்.  கீழே உள்ள  லிங்கை கிளிக் செய்து www.LuckyLimat.com செல்க. 

 www.LuckyLimat.com

- லக்கி லிமட்
Read More...

Sunday, December 2, 2012

Torch - புதிய குரோமியம் ப்ரௌசெர்

3 comments
குரோம்(Google Chrome) ப்ரௌசெர்(Browser) பற்றி அனைவருக்கும் தெரியும். தற்போது முன்னணி ப்ரௌசராக விளங்குகிறது. அறிமுகமான சில வருடங்களிலே முதன்மையாக விளங்கிய Firefox ஐ பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. குரோம் உருவான குரோமியம் நுட்பத்தை கடைபிடித்து வந்துள்ள புது ப்ரௌசெர் Torch. இதற்கும் குரோமிற்கும் வித்தியாசம் இதில் உள்ள புதிய வசதிகளே.இது குரோமில் உள்ள அனைத்து வசதிகளுடன் மேலும் மூன்று முக்கியமான வசதிகளை கொண்டு வந்துள்ளது. அவை Share,Media மற்றும் Torrent.
முதல் வசதி Share. உங்களுக்கு பிடித்த வலைதளங்களையோ , வலைப்பூ பக்கங்களையோ எளிதாக Share என்ற பட்டனை கிளிக் செய்து Twitter மற்றும் Facebook தளங்களில் ஷேர் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது youtube போன்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோகளை வேறு எந்த மென்பொருள் இல்லாமல் இதன் மூலமே டவுன்லோட் செய்து கொள்ளலாம். வீடியோ உள்ள வலைப்பக்கத்துக்கு வந்தவுடன் Media என்ற பட்டன் Video என மாறியிருக்கும். பின் Video என்ற பட்டனை கிளிக் செய்து வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மூன்றாவது Torrent மூலம் நீங்கள் டவுன்லோட் செய்யும் வசதியையும் தருகிறது. வேறு Torrent மூலம் டவுன்லோட் செய்யும் மென்பொருள் இல்லாமல் இதிலேயே செய்து கொள்ள முடியும்.

குரோம்(Google Chrome) ப்ரௌசெரையும் ,குரோமில் உள்ள வசதிகளோடு மேலும் உள்ள இந்த வசதிகளை விரும்புவோர்களுக்கு இந்த ப்ரௌசெர் பெரிதும் பயன்படும். இந்த ப்ரௌசரை பற்றிய வீடியோவை கீழே காணலாம். டவுன்லோட் செய்ய Torch Web Browser
Read More...

Tuesday, November 27, 2012

பதில்![bathil.com] - உங்கள் தொழில்நுட்ப கேள்விகளுக்கு பதில்

3 comments
தொழில்நுட்ப பதிவர்கள் "கற்போம்" - பிரபு கிருஷ்ணா மற்றும் "பிளாக்கர் நண்பன்" - அப்துல் பாசித் இணைந்து உருவாக்கியிருக்கும் அருமையான தளம் பதில்.காம் - Bathil.com . உங்களின் தொழில்நுட்ப சம்மந்தமான கேள்விகளுக்கும் , சந்தேகங்களுக்கும் இந்த தளத்தில் விடைகளையும்,பதில்களையும் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளுக்கு ஒருவரோ இருவரோ மட்டும் விடையளிக்க போவதில்லை. இந்த தளத்தில் உறுப்பினராக உள்ள யாராயினும் விடையளிப்பார்கள். நீங்களும் உறுப்பினராகி மற்றவர் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். பலரால் உங்கள் கேள்வி பார்க்கப்படுவதால் உங்கள் கேள்விகளுக்கு உறுதியாக நீங்கள் பதில்களை பெறலாம்.ஆரம்பித்த சில நாட்களிலேயே பல உறுப்பினர்களை பெற்று சிறப்பாக தளம் சென்றுகொண்டிருக்கிறது.

இதுவரை இந்த தளத்தில் சேர்ந்துள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையும்,கேள்விகளின் எண்ணிக்கையும் , பதில்களின் எண்ணிக்கையும் கீழே காணலாம்.
இத்தளத்தில் பிளாக்கர் , மொபைல் ,இன்டர்நெட் ,மென்பொருள்கள் ,வலைதளங்கள், கணிணி சம்பந்தமான அனைத்து கேள்விகளையும் , சந்தேகங்களையும் கேட்டு பெறலாம். ஆனால் Piracy பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்க படமாட்டாது.அவ்வகை கேள்விகளை தவிர்ப்பதும் நலம். 
Read More...

Thursday, November 22, 2012

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க - பாகம் 2

17 comments
டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க –  பாகம் 1 என்ற முதல் பதிவில் டவுன்லோட் செய்த திரைப்படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க வேண்டுமானால் அவை எவ்வகை வீடியோ கோப்பாக இருக்க வேண்டும் மற்றும் எவ்வகை வீடியோ கோப்பாக மற்றும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் இலவச மென்பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு DivX,XviD வீடியோ கோப்புகளாக மாற்றுவது மற்றும் எவ்வாறு டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக பற்றி பார்ப்போம்.

முதலில் DivX அல்லது XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயருக்கு எந்தவொரு வீடியோ கோப்புகளிலிருந்து டிவிடி(DVD) அமைப்பு வீடியோ கோப்புகளாக மாற்றுவது பற்றி பார்ப்போம். இதற்கு பல சிறந்த கட்டண மென்பொருள்கள் உள்ளன. சில சிறந்த இலவச மென்பொருள்களே உள்ளன. அவற்றில் ஒன்று DVDFlick. இந்த மென்பொருளை இந்த Download DVD Flick சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து நிறுவி கொள்க.

Read More...

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க - பாகம் 1

6 comments
தினமும் இணையத்தில் திரைப்படங்களை பலர் டவுன்லோட் செய்கிறோம். டவுன்லோட் செய்த படங்களை பார்க்க கணிணியில் பல வீடியோ பிளேயர்கள் உள்ளன. உதாரணமாக KM Player , VLC Media Player போன்ற பிளேயர்கள் எவ்வித திரைப்படங்களையும் , வீடியோகளையும் பார்க்க உதவுகின்றன.

சிலருக்கு கணிணியில் பார்ப்பது பிடிக்காது. வீட்டில் டிவியில் பார்க்கவே விரும்புவர். டிவியில் வீட்டில் உள்ளவர்களுடன் அல்லது  நண்பர்களுடன் பார்பதற்க்கு டிவியே சிறந்தது. இதற்கு டிவிடி பிளேயர் துணைபுரிகிறது. தற்போது வரும் டிவிடி பிளேயர்கள் பென் டிரைவ் வசதியோடு வருகிறது. இதன் மூலம் எளிதாக டவுன்லோட் செய்த திரைப்படங்களை பென் டிரைவ் மூலம் எளிதாக டிவிடி பிளேயர் துணை கொண்டு டிவியில் பார்க்கலாம்.

Read More...

ஃபயர்பாக்ஸில் புதிய வசதி - ஃபேஸ்புக்

2 comments
பிரபல உலவியான(Browser) ஃபயர்பாக்ஸ் தற்போது அதன் புதிய  பதிப்பான Firefox 17.0  வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் ஒரு முக்கியமான வசதியை இணைத்துள்ளது. அந்த வசதி என்னவென்றால் தற்போது தினமும் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகி கொண்டிருக்கிற facebook ஐ ஃபயர்பாக்ஸில் இணைத்துள்ளது. இதன் மூலம் உங்கள் facebook இன் messages,friends request மற்றும் chat ஆகியவற்றை facebook தளத்திற்கு செல்லாமலே பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த வசதியை கொண்டு வர நீங்கள் Firefox 17 டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அல்லது அப்டேட் செய்து கொள்ளுங்கள். பின்னர் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து சென்று வரும் facebook வலைபக்கத்தில் Turn on என்பதை கிளிக் செய்தால் இந்த வசதி உங்கள் ஃபயர்பாக்ஸில் வந்து விடும்.

Enable Facebook Messanger for Firefox



 அல்லது உங்கள் ஃபயர்பாக்ஸ் addressbarல் about:config என்று டைப் செய்து Enter செய்க. கீழே உள்ளது போல் எச்சரிக்கை செய்தி வரும். I'll be careful. I promise என்பதை கிளிக் செய்து தொடர்ந்து செல்க.

பின்னர் வரும் search பாக்ஸில் social.enabled என்று டைப் செய்து Enter செய்தால் கீழே உள்ளது போல் வரும். இதில் value என்பது  false என இருக்கும்.டபுள் கிளிக்(double click) செய்தால் true என மாறிவிடும். தற்போது facebook வசதி உங்கள் ஃபயர்பாக்ஸில் வந்து விடும். இந்த வசதி வேண்டாம் என்றால் false என மாற்றி கொள்க.


இந்த வசதி நீக்க கீழே உள்ள வழியையும் பின்பற்றலாம்.

Read More...

Saturday, April 30, 2011

ScreenShotக்கு மற்றொரு எளிய சிறந்த மென்பொருள்

Leave a Comment
ஏற்கனவே Screen Shots எடுக்க உதவும் மென்பொருள் பற்றி அண்மையில் இந்த பதிவை Screenshot எடுக்க சிறந்த மென்பொருள் எழுதினேன். ஏற்கனவே எழுதிய அந்த மென்பொருள் கடினமாக இருக்கிறது என்றால் இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.மிக எளிமையாக உள்ளது. இந்த மென்பொருளிலும் முழுத்திரை,குறிப்பிட்ட திரை,திரையில் குறிப்பிட்ட பகுதி மற்றும் மௌஸ் தெரிய வேண்டுமானால் அதனுடனும் எடுக்க முடியும்.

நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை வலது கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்க பட்டு விடும்.


Read More...

Sunday, April 17, 2011

மைக்ரோசாப்ட் வைரஸ் சேஃப்டி ஸ்கேனர்

1 comment

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே Microsoft Security Essentials என்னும் ஆண்டி வைரஸ் மென்பொருளை தந்துள்ளது. இது மற்ற ஆண்டி வைரஸ் மென்பொருள்களை போலவே உங்கள் கணிணியில் நிறுவி இயக்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனமே தந்தாலும் பலர் பிற இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்களையே நிறுவி பயன்படுத்துகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் மற்றொரு ஆண்டி வைரஸ் மென்பொருள் Microsoft Safety Scanner. இந்த மென்பொருளை நீங்கள் நிறுவ தேவை இல்லை, டவுன்லோட் செய்து அப்படியே கிளிக் செய்து இயக்க கூடிய போர்டபில்(Portable) மென்பொருள். உங்கள் கணிணியில் ஆண்டி வைரஸ் இருந்தும் வைரஸ் வந்தாலோ அல்லது இருக்கலாம் என நீங்கள் நினைத்தாலோ இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணிணியை ஸ்கேன் செய்து வைரசை நீக்கலாம்.

இந்த மென்பொருள் 70MB அளவு கொண்டது. தற்போது வரை உள்ள அறியப்பட்ட அனைத்து வைரஸ் பற்றிய விபரங்களையும், அதை நீக்கவும் செய்கிறது. இதை நிறுவிய பின் தோன்றும் திரையில் என்னமுறையில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்தாலே போதும் , ஸ்கேன் செய்து வைரஸ்களை நீக்கி விடும்.




ஆனால் இந்த மென்பொருளில் உள்ள குறை என்னவென்றால் நீங்கள் இதனை அப்டேட் (update)செய்ய இயலாது.மேலும் இதனை டவுன்லோட் செய்த 10 நாட்களுக்கு மேல் இயங்காது.மீண்டும் ஒருமுறை அண்மைய வைரஸ் பற்றிய விபரங்கள் கொண்ட பதிப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். அதாவது மீண்டும் 70mb கொண்ட பதிப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.

ஆனால் இதனால் என்ன பயன் என்றால் உங்கள் கணிணியில் எதிர்பாராத விதமாக வைரஸ் தாக்கி உங்கள் ஆண்டி வைரஸ் இயங்காமல் போனாலோ, இந்த மென்பொருளை உடனே டவுன்லோட் செய்து இயக்கி வைரஸ்களை நீக்கலாம். இது போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் வைரஸ் எளிதில் தாக்காது. இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.

Browse All - Lucky Limat | Download Microsoft Safety Scanner

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Read More...