இந்த பதிவை படிப்பதற்கு முன் இந்த பதிவின் முந்தைய இரு பாகங்களை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டிகளை(URL or Link) கிளிக் செய்து படித்து கொள்க.
நாம் பதியும் பதிவுகளில் Read more>> என்ற வசதியை பலரும் பயன்படுத்துவதுண்டு. அதாவது முழுபதிவையும் வலைப்பூவின் முகப்பு(Home) பக்கத்தில் காட்டாமல் பதிவின் ஆரம்ப பகுதி சிலவற்றை காட்டிவிட்டு மீதி பதிவை Read more>> அல்லது மேலும் படிக்க அல்லது தொடர்ந்து படிக்க போன்ற சுட்டி ஒன்றை கொடுத்து சுட்டியை கிளிக் செய்தால் படிக்குமாறு காட்டுவோம். எனது வலைப்பூவில் தொடர்ந்து படிக்க(Read more) » என வைத்துள்ளேன்.
Read more>> வசதியை நமது வலைப்பூவில் சேர்ப்பதற்கு பிளாக்கர்(Blogger) தளத்தில் தேவையான இடத்தில் Insert jump break கிளிக் செய்ய வேண்டும் அல்லது <!—more—> என்பதை தேவையான இடத்தில் Html Code ல் இணைக்க வேண்டும்.
விண்டோஸ் ரைட்டரில் இந்த வசதியை உங்கள் பதிவில் கொண்டு வர மேலே உள்ள Insert என்னும் மெனுவை கிளிக் செய்து அதன் பின்னர் Split post கிளிக் செய்து பதிவில் தேவையான இடத்தில் இணைக்கலாம் அல்லது <!—more—> என்பதை தேவையான இடத்தில் Html Code ல் இணைக்க வேண்டும்.
Split post என்பதை கிளிக் செய்தவுடன் கீழே படத்தில் உள்ளது போல் More என குறியிட்டு குறுக்கே ஒரு கோடு தெரியும். இந்த கோட்டிற்கு மேலே உள்ள வலைப்பூவின் முகப்பு(Home) பக்கத்தில் தெரியும். கீழே உள்ள பகுதி Read more>> கிளிக் செய்தால் காட்டப்படும்.
உங்கள் பதிவில் Map இணைக்க நினைத்தால் அதற்கு Insert மெனு சென்று Map என்பதை கிளிக் செய்து Map இணைக்கலாம்.
மேலும் அதே Insert மெனுவில் Emoticon கிளிக் செய்து அழகான Emoticon பட ஐகான்களை இணைத்து கொள்ளலாம்.
நீங்கள் புதியதாக மற்றொரு வலைப்பூவை இணைக்க விரும்பினால் கீழே படத்தில் காட்டியுள்ளவாறு Add blog account என்பதை கிளிக் செய்து இணைத்து கொள்ளலாம்.
மேலும் Manage blog account என்பதை கிளிக் செய்து உங்கள் வலைப்பூவை மாற்றவோ , நீக்கவோ முடியும்.
நீங்கள் உங்கள் வலைப்பூவின் theme மாற்றினால் , Blog Account மெனு சென்று Update theme என்பதை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பூவின் தற்போதைய theme தருவிக்கப்பட்டு விடும்.
நீங்கள் அண்மையில்(recent) பதிந்த பதிவை மீண்டும் எதாவது மாற்றம் செய்ய விரும்பினால் open recent post வசதி மூலம் மாற்றலாம்.
அண்மையில் அல்லது சமீபத்தில்(recent) பதிந்த பதிவுகள் மட்டுமில்லாது எந்தவொரு பதிவையும் எடுத்து மாற்றம் செய்யலாம். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூ வைத்திருந்தால் தேவையான வலைப்பூவை தேர்வு செய்து பழைய பதிவுகளை விண்டோஸ் ரைட்டரில் கொண்டுவரலாம்.
மேலே உள்ள படத்தில் Show 50 items என தேர்வு செய்தால் கடைசியாக பதிந்த 50 பதிவுகள் தருவிக்கப்படும். All என்பதை தேர்வு செய்தால் அனைத்து பதிவுகளும் தருவிக்கப்படும்.
நண்பர்களே இத்துடன் இந்த தொடர் பதிவு முடிவடைகிறது. கிட்டதட்ட நமக்கு பயன்படும் விண்டோஸ் ரைட்டரின் அனைத்து வசதிகளை பற்றியும் பதிவிட்டுள்ளேன். விண்டோஸ் ரைட்டர் வலைப்பூ பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சிறந்த மென்பொருள் என்பதில் ஐயமில்லை. இந்த தொடர்பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் விட்டு செல்க.
இந்த பதிவின் முந்தைய இரு பாகங்கள்

5 comments:
// Read more>> வசதியை நமது வலைப்பூவில் சேர்ப்பதற்கு பிளாக்கர்(Blogger) தளத்தில் தேவையான இடத்தில் Insert jump break கிளிக் செய்ய வேண்டும் அல்லது என்பதை தேவையான இடத்தில் Html Code ல் இணைக்க வேண்டும். //
அப்போ span class="fullpost" எனும் கோட் தேவைப்படாதா???
தேவையில்லை ஹாலிவுட்ரசிகரே, அது பழைய முறை
சார் ஒரு பாட்டில் உள்ள voice ஐ யும் track -ஐ தனி தனியே தெளிவாக பிரிக்க மென்பொருள் இருந்தால் சொல்லவும்
good series
"விண்டோஸ் ரைட்டர் வலைப்பூ பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சிறந்த மென்பொருள் என்பதில் ஐயமில்லை"
சந்தேகமே இல்லை. மிகச் சிறந்த உதவி செய்துள்ளிர்கள்.
எனைப் போன்றவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம்.
நன்றி
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.